அதிமுக பாஜக கூட்டணி உடைந்தால் NDA முதல்வர் வேட்பாளர் சீமான்.. அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால் ஆட்சி உறுதி.. தவெக தனித்து போட்டியிட்டால் தொங்கு சட்டசபை தான்.. அரசியல் வல்லுனர்கள் கணிப்பு..!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடித்து வரும் நிலையில், அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் பல்வேறு புதிய சாத்தியக்கூறுகளை அலசி வருகின்றனர். தற்போதுள்ள அரசியல் சூழலில், பல்வேறு கட்சிகளின்…

seeman vijay

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடித்து வரும் நிலையில், அரசியல் விமர்சகர்கள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் பல்வேறு புதிய சாத்தியக்கூறுகளை அலசி வருகின்றனர். தற்போதுள்ள அரசியல் சூழலில், பல்வேறு கட்சிகளின் கூட்டணி முடிவுகள், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கணிப்புகள் எழுந்துள்ளன.

சீமான் – பாஜக கூட்டணி: ஒரு புதிய சாத்தியம்?

அதிமுக-பாஜக கூட்டணி உடைந்தால், அதாவது பாஜகவை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றினால், பாஜக ஒரு தனி கூட்டணி அமைத்து, அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்புள்ளது என்ற ஒரு புதிய கருத்து வலுப்பெற்று வருகிறது. பீகாரில் நிதிஷ் குமார் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதைப் போலவே, தமிழகத்திலும் பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக சீமானை முன்னிறுத்தலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் அதிமுகவும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் இணைந்து ஒரு கூட்டணியை அமைத்தால், அந்த கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைப்பது உறுதி என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். விஜய்யின் அரசியல் வருகை, ஏற்கனவே வலுவான அடித்தளத்தை கொண்டுள்ள அதிமுகவுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும். அதேபோல, அதிமுகவின் வாக்கு வங்கியை பயன்படுத்திக்கொள்ள தவெக-விற்கும் இந்த இணைப்பு உதவும்.

திமுக கூட்டணியில் இருந்து, காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற கட்சிகள் விலகி, தவெக கூட்டணியில் இணைந்தாலும் கூட, தவெகவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தவெகவின் வளர்ச்சியும், அது திரட்டும் கூட்டணி சக்தியும் தமிழக அரசியலை முழுமையாக மாற்றியமைக்கும் காரணியாக அமையும்.

‘தொங்கு சட்டமன்றம்’ சாத்தியமா?

அதிமுக – பாஜக ஒரு கூட்டணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு தவெகவும் தனித்து தேர்தலைச் சந்தித்தால், அது தொங்கு சட்டமன்றத்திற்கு வழிவகுக்கும் என்று கணிக்கப்படுகிறது. திமுக அதன் தற்போதைய கூட்டணியை தக்கவைத்துக்கொண்டாலும், ஆட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி காரணமாக அந்த கூட்டணிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தேர்தலுக்கு பிறகுதான் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் நிலை ஏற்படும். அத்தகைய நிலைமை, தமிழக அரசியலில் நிலையற்றத்தன்மையையும், புதிய அரசியல் கணக்குகளையும் உருவாக்கும். இந்த சாத்தியக்கூறுகள் அனைத்தும், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு மிக முக்கியமான தேர்தலாக அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது.