சென்னை: தமிழ்நாட்டில் மகளிருக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் பல ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வந்து கொண்டிருக்கிறது. புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள், உடனே மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். எப்படி என்பதை பார்ப்போம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தி வருகிறது. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர் இந்த திட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள்.
இந்த திட்டத்தில் பயளானிகள் தேர்வு எப்படி இருக்கும் என்றால். ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் யாரும் வருமான வரி செலுத்துபவர்களாக அல்லது வருமான வரி ஆண்டு கணக்கு தாக்கல் செய்பவர்களாக இருக்கக்கூடாது அடுத்ததாக குடும்பத்தில் உள்ள யார் பெயரிலும் நான்கு சக்கர வாகனங்கள் இருக்கக்கூடாது.. மின் பயன்பாடு 3600 யூனிட்டுக்கு மேல் ஆண்டுக்கு இருக்கக்கூடாது.
இதேபோல் விண்ணப்பிக்கும் மகளிர் 21 வயது நிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த மூன்று தகுதியையும் ஆன்லைனிலேயே தமிழக அரசு கண்டுபிடித்து தான் மகளிர் உரிமை தருகிறது. இதை வைத்து தான் விண்ணப்பிங்களை எளிதாக கண்டுபிடித்து அரசு நிதியுதவி வழங்குகிறது. மற்ற விண்ணப்பங்களை நிராகரித்து விடுகிறது.. மாதம் ஆயிரம் உரிமை தொகையை சுமார் ஒரு கோடியே 8 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பெற்று வருகிறார்கள்..
இந்நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட உடனேயே, அதுவரை ஒரே குடும்பமாக இருந்த பலர், தனி ரேஷன் கார்டு, விண்ணப்பித்தார்கள். அதேபோல் புதிதாக திருமணம் ஆனவர்களும், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தார்கள். இதனால் பெரிய அளவில் விண்ணப்பங்கள் அப்போது குவிந்தது. இதையடுத்து அரசு தற்காலிகமாக விண்ணப்பங்களை நிறுத்தி வைத்தது. இதனிடையே சரியாக ஓராண்டுக்கு பின்னர் தற்போது பலருக்கும் ரேஷன் கார்டு வந்துள்ளது. லோக்சபா தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் சுமார் 2 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகிறது. வட்ட வழங்கல் அலுவலகங்களில் தாங்களோ, தங்கள் குடும்ப உறுப்பினர் எவரேனுமோ சென்று பெற்றுக் கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை ரேஷன் கடைகள் வாயிலாகப் பெற்று பயனுறும் வண்ணம் புதிய ரேஷன் கார்டுகள் தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 7.5.2021 முதல் 30.6.2023 வரையில் 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.இதுதவிர வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இடையிலேயே 27 ஆயிரத்து 577 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது,
புதிய ரேஷன் கார்டுகள்: இது ஒருபுறம் எனில், ஏற்கனவே பெறப்பட்ட பல ஆயிரம் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய 45 ஆயிரத்து 509 புதிய ரேஷன் கார்டுகள் தேர்தலுக்கு முன் வழங்கப்பட்டது.. இதேபோல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த சுமார் 2லட்சம் பேருக்கு தற்போது ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளத.. இதனிடையே புதிதரிக ரேஷன் அட்டை வாங்கியவர்கள் நேராக கடைகளுக்கு சென்று, விரல் ரேகை சரிபார்ப்புக்கு பின்னர் ரேஷன் கடையில் தேவையான பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு வந்தவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கவே ஆர்வம் காட்டுவார்கள். புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு நிச்சயம் விண்ணப்பிக்கலாம். புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க விரைவிலேயே அழைப்பு வர வாய்ப்பு உள்ளது,
கலைஞர் மகளிர் உரிமை தொகை : ஏனெனில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 2024-25ம் நிதியாண்டில் 13720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. தற்போது ஒரு கோடியே 8 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெறும் நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 7 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்க முடியும். எனவே சுமார் 7 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்து பயன்பெற முடியும் என்பதால், புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடக்கூடும்.