விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி. இவர் கடந்த மார்ச் மாதம் முதல் அப்பதவியில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன் மினி வேனில் அருப்புக்கோட்டை அருகே சரக்கு ஏற்றிச் சென்றபோது ஒரு கும்பல் வழிமறித்து, மினி வேன் டிரைவர் காளிக்குமாரை வெட்டியது இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமார் உறவினர்கள் அருப்புக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தடுக்க முயன்றார். அப்போது காயத்ரியின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அதிரடியாக சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் ஏற்படுத்திய சலசலப்பு மறைவதற்குள், அருப்புக்கோட்டை புதிய காவல் கண்காணிப்பாளராக மதிவாணன் நேற்று பொறுப்பேற்றுக்ெகாண்டார்.
துணை காவல் கண்காணிப்பாளர் காயத்ரி திடீரென மாற்றப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி கடந்த மாதம் 27-ந் தேதியே இடம் மாற்றப்பட்டார். அதாவது கட்சி பேரணியின் போது சரியான அணுகுமுறை இல்லை என அவர் மீது சிலர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
இதற்கிடையே, அருப்புக்கோட்டையில் உள்ள போலீஸ் நிலையங்களில் பெண் அதிகாரிகள் அதிகம் உள்ளனர். எனவே இந்த காரணங்களால் காயத்ரி மாற்றப்பட்டு இருந்த நிலையில், அதற்கு பின்னர்தான் அவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது. எனவே அந்த சம்பவத்துக்கும், காயத்ரி இடமாற்றத்துக்கும் ெதாடர்பு இல்லை. இவ்வாறு போலீசார் விளக்கம் அளித்தனர்.