படிப்படியாக பொதுச் செயலாளர் பதவியில் உள்ள அதிகாரங்களை தலைவர் பதவிக்கு மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார் என்றும், எதிர்காலத்தில் அதிமுக தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு வரும் என்றும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளதால், இன்னும் ஒரே ஒரு தேர்தலில் அவர் தோல்வி அடைந்துவிட்டால், அதிமுக அவருடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகும் வாய்ப்பு இருக்கிறது.
அதனால்தான் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த கவனத்துடன் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு மெகா கூட்டணியை அமைத்து வருகிறார். செங்கோட்டையன் பிரச்சனையையும் அவர் சுமூகமாக தான் கையாண்டு வருகிறார் என்றும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் முயற்சியும் அவர் மேற்கொண்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனியாக செங்கோட்டையன் ஒரு டிராக்கில் செல்வது, அதிமுக தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், தேர்தல் நெருக்கத்தில் இருவரும் இணைந்து அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவார்கள் என்றும் தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அந்த நம்பிக்கையை இருவரும் பூர்த்தி செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.