விஜய்யுடன் சேர்ந்தால் துணை முதல்வர் பதவியாவது கிடைக்கும்.. பாஜகவுடன் சேர்ந்தால் எதிர்க்கட்சி தலைவர் கூட இல்லை.. மீண்டும் ஒரு தோல்வியை ஈபிஎஸ் தாங்க முடியாது..!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ளது. திமுகவின் வலுவான கூட்டணிக்கு எதிராக, அதிமுக தனது நிலையை தக்கவைத்து கொள்ளப் போராடி வருகிறது. இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…

vijay eps

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ளது. திமுகவின் வலுவான கூட்டணிக்கு எதிராக, அதிமுக தனது நிலையை தக்கவைத்து கொள்ளப் போராடி வருகிறது. இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்து, விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, தானே துணை முதல்வர் பதவியை ஏற்கலாம் என்ற ஒரு அரசியல் கணிப்பு தற்போது வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. பாஜக தவிர வேறு எந்த முக்கிய கட்சிகளும் கூட்டணிக்குள் வராத விரக்தியே இத்தகைய ஒரு முடிவை எடப்பாடி பழனிசாமி எடுக்கத் தூண்டலாம் என்று கருதப்படுகிறது.

எடப்பாடியின் புதிய வியூகம்: ஏன் விஜய்யை துணை முதல்வராக ஏற்க வேண்டும்?

அதிமுக கூட்டணியில் பாஜக தவிர வேறு எந்த பெரிய கட்சிகளும் இணைய ஆர்வம் காட்டாத நிலையில், எதிர்காலத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட இழக்க நேரிடும் என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நிலவுவதாக கூறப்படுகிறது. 2024 தேர்தலில் 40 தொகுதிகளையும் இழந்தது போல் இந்த முறையும் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டால் தனது அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு கூட ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் ஈபிஎஸ்-க்கு உள்ளது. இந்த சூழலில், விஜய்யுடன் கைகோர்ப்பது ஒரு அரசியல் தேவை என்ற கணிப்பு வலுப்பெறுகிறது.

அரசியல் இருப்பு:

தனது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள கொள்ள முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக்கொடுத்து, ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருந்தார். அதேபோல், எதிர்காலத்தில் தனது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்ள, விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, தான் துணை முதல்வர் பதவியை ஏற்க எடப்பாடி பழனிசாமி யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்கு உள்ள இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் உள்ள பெரும் செல்வாக்கு, அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை இணைக்கும்போது, திமுக கூட்டணிக்கு ஒரு வலுவான சவாலை உருவாக்க முடியும் என்று கணிக்கப்படுகிறது.

பாமக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் நீடிப்பதால், அதிமுக தனித்து செல்லும் பட்சத்தில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படலாம் என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யுடன் இணைவது, திமுகவுக்கு ஒரு வலுவான மாற்றாக தங்களை நிலைநிறுத்தி கொள்ள உதவும்.

அரசியல் நோக்கர்களின் கூற்றுப்படி, எடப்பாடி பழனிசாமி உடனடியாக இந்த முடிவை அறிவிக்க மாட்டார். டிசம்பர் மாதம் வரை காத்திருந்து, அரசியல் சூழலை உன்னிப்பாக கவனித்து, அதன் பிறகே விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு துணை முதல்வர் பதவியை பெற சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு கணிப்பு மட்டுமே என்றாலும், தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் வருகை, பாரம்பரிய கூட்டணி கணக்குகளை மாற்றி அமைக்கும் ஆற்றல் கொண்டது என்பதையே இது காட்டுகிறது. வரவிருக்கும் நாட்களில் தமிழக அரசியல் களம் மேலும் பல அதிரடி திருப்பங்களை காணும் என்பதில் சந்தேகமில்லை.