அதிமுக தோன்றிய பின் திமுக 2வது முறை ஆட்சிக்கு வந்ததாக வரலாறே இல்லை.. எதிர்க்கட்சிகள் பிரிந்து இருப்பது திமுகவுக்கு சாதகம் தான்.. ஒருவேளை திமுக தோற்றால் அதற்கு விஜய் மட்டும் தான் காரணமாக இருப்பார்.. திமுகவின் கனவை கலைப்பது தவெக தான்..!

திமுக தனது இரண்டாவது ஆட்சி காலத்திற்கு தயாராகிவரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தல் பல்வேறு எதிர்பார்ப்புகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 53 ஆண்டுகளில் திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்ததில்லை என்ற புள்ளிவிவரம்,…

admk dmk vijay

திமுக தனது இரண்டாவது ஆட்சி காலத்திற்கு தயாராகிவரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தல் பல்வேறு எதிர்பார்ப்புகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 53 ஆண்டுகளில் திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்ததில்லை என்ற புள்ளிவிவரம், இந்த தேர்தலை ஒரு பெரிய சவாலாக பார்க்க வைக்கிறது.

1972-ல் அண்ணா திமுக உருவான பிறகு, தமிழகத்தில் திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்ததில்லை. இந்த புள்ளிவிவரம், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பது மிக மிகக் கடினமானது என்பதை காட்டுகிறது.

எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்த காலத்தில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்தது என்றால், அதில் எம்ஜிஆர் பங்கு பெருமளவு உண்டு. திமுகவின் வெற்றிக்கு அவரும் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், அண்ணா திமுக உருவான பிறகு, இரட்டை இலை சின்னத்துடன் அந்த கட்சி களத்தில் இறங்கிய பின்னர், ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த திமுகவிற்கு 2வது முறை வெற்றி என்பது இயலாத ஒன்று என்று தான் இருந்தது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த புள்ளிவிவரங்களின்படி, திமுக இரண்டாவது முறை வெற்றி பெறுவது என்பது கடினமாக விஷயம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் புள்ளிவிவரங்கள் திமுகவுக்கு சாதகமாக இல்லை என்றாலும் கள நிலவரங்கள் வேறுவிதமாக உள்ளன. திமுகவிடம் அதிக அளவில் பணபலம் உள்ளது. ஆட்சி கையில் உள்ளது. இது தேர்தல் பிரசாரத்திலும், களப்பணியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வலுவான கூட்டணிகள் திமுகவுக்கு ஆதரவாக உள்ளன. இது வாக்குகளை பிரிப்பதை தடுத்து, வெற்றியை எளிதாக்கலாம்.

அண்ணா திமுக கட்சிக்குள் உள்ள ஒற்றுமையின்மை திமுகவுக்கு சாதகமாக உள்ளது. இரட்டை இலை சின்னம் மீண்டும் களத்தில் வந்தாலும், இந்த உள் பூசல்கள் அதிமுகவின் வெற்றியை பாதிக்கக்கூடும். அதுமட்டுமின்றி எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடப்பது, திமுகவுக்கு ஒரு கூடுதல் பலமாக உள்ளது.

ஒருவேளை திமுக வரும் தேர்தலில் தோல்வி அடைந்தால் அதற்கு விஜய் தான் முக்கிய காரணமாக இருப்பார். விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய சக்தியின் வருகை, 2026 தேர்தலில் ஒரு புதிய புரட்சியாக உள்ளது. இது திமுகவுக்கு எதிராக அலைகளை உருவாக்கினாலும், அலைகள் எப்படி மாறும் என்பதைப் பொறுத்துதான் இறுதி முடிவுகள் அமையும்.

இந்த சூழ்நிலையில், புள்ளிவிவரங்கள் திமுகவுக்கு பாதகமாக இருந்தாலும், திமுகவின் பணபலம் மற்றும் வலுவான கூட்டணி காரணமாக, அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை திமுக ஆட்சியை இழந்தால் அதற்கு விஜய் தான் முழு காரணமாக இருப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.