’குக்கூ’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான ராஜூ முருகன், அதன் பிறகு ஜோக்கர், மெஹந்தி சர்க்கஸ், ஜப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கினார். தற்போது, அவர் சசிகுமார் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், ராஜூ முருகன் மனைவி ஹேமா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தாம் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொடர்பான செயல்கள் நடைபெறுவதாக சந்தேகம் இருப்பதாகவும்,
இது குறித்து புகார் அளித்ததன் பின்னர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மாதம் ரூ.22,000 கட்டணம் வசூலிக்கப்படுகின்ற நிலையில், தனது வீட்டு அருகே உள்ள குப்பைகள் அகற்றப்படவில்லை. தனது குழந்தைகளுக்கு நீச்சல் குளத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது குடும்பத்தை பற்றிய தவறான தகவல்களை குடியிருப்பாளர்களிடம் பரப்பி வருகின்றனர். இவற்றையெல்லாம் அந்த பாலியல் தொழில் நடத்தும் கும்பலே செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை தடுக்கும் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.