திருப்பரங்குன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் கார் டயர் வெடித்ததற்கு முருகக்கடவுள் காரணமா? யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம், முருகனை எதிர்க்கலாமா? என ஆன்மீகவாதிகள் கேள்வி.. தற்செயல் விபத்தா? சதியா? அல்லது முருகனின் திருவிளையாடலா?

  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் பயணத்தை முடித்துவிட்டு மதுரை நோக்கி திரும்பும்போது, அவரது காரின் டயர் திடீரென வெடித்த சம்பவம் அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார்…

cm stalin

 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திண்டுக்கல் பயணத்தை முடித்துவிட்டு மதுரை நோக்கி திரும்பும்போது, அவரது காரின் டயர் திடீரென வெடித்த சம்பவம் அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், இது ஒரு தற்செயலான விபத்தா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்குமா என்ற கோணத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து அரசியல் விமர்சகர் தேவப்ரியா கூறிய கருத்துக்கள் இதோ..

பொதுவாக முதலமைச்சரின் கார் டியூப்லெஸ் டயர்களை கொண்டது என்பதால், அவை அவ்வளவு எளிதில் வெடிக்க வாய்ப்பில்லை என்றும், ஒருவேளை டயரில் ஏதேனும் கீறல் இருந்திருந்தால் மட்டுமே அதிவேகத்தில் செல்லும்போது இது போன்ற வெடிப்பு நிகழக்கூடும் என்றும் வாகன நிபுணர்கள் கருதுகின்றனர். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு முதல்வர் பாதுகாப்பாகத் தப்பினார்.

இந்த சம்பவத்தை ஆன்மீக ரீதியாக பார்க்கும் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி தலைவர்கள், இது ‘முருகன் கொடுத்த தண்டனை’ என்று விமர்சிக்க தொடங்கியுள்ளனர். திருப்பரங்குன்றம் கோவிலில் பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கத்திற்கு எதிராக, இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வாதாடியதே இதற்கு காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் முருகப்பெருமானின் தனிப்பட்ட விஷயங்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இறைவனின் விவகாரத்தில் அரசியல் புகுத்தப்பட்டதன் விளைவாகவே, அந்த திருப்பரங்குன்றம் பகுதிக்குள்ளேயே முதல்வரின் கார் விபத்தை சந்தித்ததாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் சதி குறித்த கேள்விக்கு, பதில் கூறிய தேவப்ரியா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பல்லாவரம் அருகே அவர் மீது லாரி ஏற்றி நடத்தப்பட்ட விபத்து முயற்சி முன்னுதாரணமாக காட்டப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழலில் முதல்வருக்கு வழங்கப்பட்டுள்ள அதீத பாதுகாப்பு மற்றும் முன்செல்லும் கான்வாய் வண்டிகள் காரணமாக சதி நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே அரசியல் விமர்சகர் தேவப்பிரியா போன்றோர் கருதுகின்றனர். அதேவேளையில், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் விவகாரத்தில் தலையிட முயன்றபோது நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தையும் இதனுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். இயற்கையோ அல்லது இறை சக்தியோ எதுவாக இருந்தாலும், பாரம்பரியமான வழிபாட்டு முறைகளில் அரசு தலையிடும்போது இது போன்ற சகுனங்கள் விவாதத்திற்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாகிறது.