முதல்வர் வேட்பாளர் கருத்துக்கணிப்பு.. 2ஆம் இடம் பிடித்த விஜய்.. ஒரு வருடத்தில் முதலிடம் வருவாரா?

  தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கருத்துக்கணிப்பில், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலிடத்தையும், விஜய் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் எடப்பாடி…

vijay admk

 

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கருத்துக்கணிப்பில், தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலிடத்தையும், விஜய் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நான்காவது இடத்தில் அண்ணாமலை இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், அவரது அரசியல் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக இருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது டார்கெட் மாநில அரசு மட்டுமன்றி மத்திய அரசும் என்பதும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டைம்ஸ் நவ் ஊடகம் தமிழகத்தில் வெற்றி பெறும் முதல்வர் வேட்பாளர் குறித்த கருத்துக்கணிப்பை எடுத்துள்ளது. இதில், முதல்வர் மு.க. ஸ்டாலின் 27% வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் விஜய் 18% வாக்குகள் பெற்றுள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு 10% வாக்குகளும், அண்ணாமலைக்கு 9% வாக்குகளும் கிடைத்துள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுமையாக ஒரு ஆண்டு இருக்கும் நிலையில், அதற்குள் விஜய் இன்னும் தீவிரமாக பிரச்சாரம் செய்தால், முதலிடத்தை பெற்று விடுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களது கணிப்பு உண்மையாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!