கொடி அறிமுகம் செய்த போது அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத புஸ்ஸி ஆனந்த்.. விஜய் ரியாக்சன்!

Published:

சென்னை: கொடி அறிமுகம் செய்த போது விஜய் அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டு புஸ்ஸி ஆனந்த் ஆனந்த கண்ணீர் விட்டபடி அழுது கொண்டிருந்தார். இதை அமைதியாக விஜய் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அரசியலில் களமிறங்கி உள்ளார். விஜய்யின் கோட் படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது. அடுத்தாக ஹெச் வினோத் இயக்கத்தில்ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதன்பிறகு நடிப்பாரா என்பது உறுதியாக தெரியவில்லை.. அடுத்த படம் முழுமையான அரசியல் படமாக இருக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்,தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கட்சியைத் தொடங்கினார். கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கொடி, கொள்கைகள் வெளியிடப்படும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிடும் என்று அறிவித்தார். இதனிடையே ஆகஸ்ட் 22ம் தேதியான இன்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதற்காக பனையூரில் உள்ள அலுவலகத்தில் சுமார் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நடப்பட்டது. திட்டமிட்டபடி இன்றைய தினம் விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த கொடியில், இரட்டை போர் யானை நடுவில் வாகைப்பூ ஆகியவை இடம் பெற்றன. கட்சி கொடியை அறிமுகம் செய்யும் முன்பு, விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதி மொழியையும் வாசித்தார். அதைத் தொடர்ந்து கட்சிக் கொடியை அந்த 40 அடி கொடி கம்பத்தில் ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், விஜய் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.இந்தநிகழ்ச்சி கொடி அறிமுகம் செய்து பாடல் வெளியான போது விஜய் அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டு புஸ்ஸி ஆனந்த் அழுது கொண்டிருந்தார். இதை அமைதியாக விஜய் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

மேலும் உங்களுக்காக...