தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், “பாஜக என்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருந்தது மக்களுக்கு தெரியாத நிலையில், நான்தான் பட்டி தொட்டி எங்கும் கட்சியை எடுத்துச் சென்றேன்; ஆனால் கணக்கைப் போது ஆப்பு வைத்து விட்டார்கள்” என்றும் தமது ஆதரவாளர்களிடம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், அவர் செய்த சில தவறுகளால் தான் பதவியை இழந்தார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, “திமுகவையே எதிர்க்க வேண்டும்” என்ற ஒரே குரலில் பாஜக ஒட்டுமொத்தமாக இருந்தபோதும்,
அண்ணாமலை திமுகவையே மட்டும் இன்றி அதிமுகவையும் விமர்சித்தார்.
குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததை அதிமுகவின் தொண்டர்கள் ரசிக்கவில்லை என்றும், அதனால்தான் “அண்ணாமலை இருந்தால் பாஜகவுடன் கூட்டணி இல்லை” என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி, பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால், கண்டிப்பாக பத்து தொகுதிகளை தமிழகத்தில் வென்றிருக்கலாம் என்றும், அந்த கூட்டணி முறிவுக்கு ஒரே காரணம் அண்ணாமலையே தான் என்றும் டெல்லி கணித்துள்ளது.
எனவே, இனியும் அண்ணாமலையை தலைமை பொறுப்பில் வைத்திருந்தால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியாது என்பதால் தான் அவர் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில், ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்த தியாகத்திற்காக, அவருக்கு கண்டிப்பாக ஒரு பெரிய பதவி கொடுக்கப்படும் என்றும், பாஜக தேசிய தலைவர் பதவி அல்லது மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும், கேபினட் அளவில் அவருக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்க மோடி மற்றும் அமித்ஷா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஒரு ஜோதிடர், அண்ணாமலை பிரதமர் வேட்பாளராக வர வாய்ப்பு இருப்பதாக கூறிய நிலையில், மத்திய அமைச்சராக அடுத்தடுத்து உயர்வைப் பெறுவதன் மூலம், தேசிய அளவில் அண்ணாமலை முன்னேறிச் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
“இனிமேல் தமிழ்நாட்டு பக்கமே வரமாட்டேன்; தமிழ்நாட்டை இனிமேல் கண்டு கொள்ள மாட்டேன்” என்று அண்ணாமலை கூறியதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அண்ணாமலையின் திறமைக்கு உரிய மதிப்பு கிடைக்குமா? படிப்படியாக முன்னேற்றம் பெற்று உச்ச பதவிக்கு செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.