அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கின்றாரா? அப்படி ஆரம்பித்தால் அது தமிழக பாஜகவை விட பெரிய கட்சியாகிவிடும்.. உளவுத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்.. மோடி, அமித்ஷா எடுக்க போகும் அதிரடி முடிவு..!

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தனி அரசியல் கட்சி தொடங்குவதற்கான வாய்ப்பு குறித்து டெல்லியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியே, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு, பா.ஜ.க.வின் அமைப்பு செயலாளர் பி.எல்.…

amitshah annamalai

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தனி அரசியல் கட்சி தொடங்குவதற்கான வாய்ப்பு குறித்து டெல்லியில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியே, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு, பா.ஜ.க.வின் அமைப்பு செயலாளர் பி.எல். சந்தோஷுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர் தான் பி.எல். சந்தோஷ், அண்ணாமலையை சந்தித்து, அவரது அதிருப்திக்கான காரணங்கள் குறித்து பேசியுள்ளார். அப்போது, “தான் கட்சிக்காக கொண்டு வந்த 11.4% வாக்குகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஏமாற்றுவதில் வல்லவர். எனவே, அவரிடம் இருந்து வலுவான இடங்களை பெற வேண்டும்” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பி.எல். சந்தோஷ், அண்ணாமலையை சமாதானப்படுத்தியதாகவும், எடியூரப்பா மற்றும் கல்யாண் சிங் போன்ற தலைவர்களை போல் அண்ணாமலையை கட்சியை விட்டு வெளியேற மோடி அனுமதிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையேயான உறவு, இரு கட்சிகளின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பா.ஜ.க. தலைமை கருதுகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வுடனான கூட்டணியில் சில விஷயங்களில் திருப்தி அடையாததால், இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் போன்றோரை இணைப்பது குறித்தும், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரின் நிலைப்பாடுகள் குறித்தும் டெல்லி தலைமை தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

தமிழகத்தில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி ஒற்றை இலக்கத்திலிருந்து இரட்டை இலக்கமாக உயர்ந்ததில் அண்ணாமலையின் பங்கு மிக முக்கியமானது என்று பா.ஜ.க. தலைமை கருதுகிறது. மேலும், அவர் ஜாதிக்கு அப்பாற்பட்ட தலைவராக பார்க்கப்படுவதால், அவரை இழந்தால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் உளவுத்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பித்தால், அவரது கட்சிக்கு தமிழக பாஜகவை விட அதிக வாக்குசதவீதம் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

இந்த அரசியல் சூழ்நிலையில், தமிழகத்தில் பா.ஜ.க.வின் பலம், அதன் கூட்டணி மற்றும் தலைமை நிலைப்பாடுகள் குறித்து தீவிரமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.