அதிமுக – தவெகவை சேரவிடாமல் தடுக்கும் 2 சக்திகள்.. இதில் மட்டும் திமுக – பாஜக ஒற்றுமை?

  வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி சேர்ந்தால், திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இந்த கூட்டணியை ஏற்படுத்த விடாமல் திமுக தந்திரமாக…

vijay admk

 

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி சேர்ந்தால், திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இந்த கூட்டணியை ஏற்படுத்த விடாமல் திமுக தந்திரமாக காய் நகர்த்துவது அரசியலாகவே பார்க்கலாம்.

ஆனால், இதில் பாஜகவும் இணைந்துள்ளது என்பதே பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி சேர்ந்தால், தனித்து விடப்படுவோம் என்ற அச்சம் பாஜகவுக்கு இருப்பதால், இந்த இரு கட்சிகளும் சேராமல் சில உள்ளடி வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அதேபோல், அதிமுக, தமிழக வெற்றி கழகம், பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டால், திமுக மிக எளிதாக வெல்லும் என்ற கணிப்பும் உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேராமல் இருக்கும் நடவடிக்கைகளை திமுக எடுக்கலாம்.

இதுவரை நடிகர்கள் கட்சி ஆரம்பித்து தனித்து நின்று போட்டியிட்டதில் தோல்வியை சந்தித்துள்ளனர். குறிப்பாக, விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் எடுத்த தவறான முடிவுகளால், அரசியலில் சாதிக்க முடியாமல் போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உண்மையை உணர்ந்த தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் எதிர்காலம் வலுவாக இருக்க, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதே சிறந்த முடிவு என கருதுகிறார். இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு, அதிமுகவின் வாக்கு சதவீதமும் சேர்ந்தால், ஆட்சியை கைப்பற்றலாம் என விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர் கணக்கிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

எனவே, திமுக மற்றும் பாஜக எந்த அளவிற்கு உள்ளடி வேலை செய்தாலும், அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி ஏற்படுவது உறுதி என்றும், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.