அதிமுக கூட்டணி பலமாக இருந்தாலும், விஜய் நினைத்ததே கடைசியில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நடக்கப்போகிறது என்றும், தமிழகம் இதுவரை கண்டிராத அளவில் தொங்கு சட்டசபை தான் நிகழும் என்றும் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்பதும், அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அந்த கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக சேர்ந்துவிட்டால், தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், புரட்சி பாரதம் மற்றும் சில சிறிய கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது. இதனால், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளும் வலுவாக இருக்கும் நிலையில், இரு கூட்டணிகளும் சவால் விடும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், அதே நேரத்தில், இந்த இரண்டு கட்சிகளால் பாதிக்கப்படாத இளைய தலைமுறை வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் இஸ்லாமிய வாக்காளர்களில் ஒரு பகுதி தனக்கு கிடைக்கும் என்று விஜய் நம்பிக்கையுடன் இருக்கிறார். விஜய், தனக்கு நெருக்கமான வட்டாரங்களில், “இந்த தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. ஆனால், தொங்கு சட்டசபை ஏற்பட்டால், ஏதாவது ஒரு கூட்டணிக்கு நாம் ஆதரவு கொடுத்து, நமக்கு தேவையான முக்கிய பதவிகளை பெற்றுக்கொள்ளலாம். அதனை அடுத்து, 2031 ஆம் ஆண்டு தனித்து ஆட்சி அமைக்கலாம்” என்றும் கூறி வருகிறாராம்.
விஜய்யின் திட்டமே, அதிமுக அல்லது திமுக எந்தக் கூட்டணியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்காமல், தொங்கு சட்டசபை ஏற்பட வேண்டும் என்பதுதான் என்றும், அதுவே அவரது திட்டம் என்றும் கூறி வரப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளர் ஒருவரும், தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக தொங்கு சட்டசபை அமையும் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஜய் நினைத்தபடி தொங்கு சட்டசபை அமைக்குமா? அதிமுக அல்லது திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து, முக்கிய அமைச்சர் பதவிகள், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பெற்றுக்கொள்வாரா? என்பதெல்லாம் தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.