விஜய் பின்வாங்குவது அவருக்கு நல்லது.. இது அவருக்கான தேர்தல் கிடையாது.. 2031ல் வரலாம்..!

  2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளும் வலிமையாக இருக்கும் என்பதால், இந்த தேர்தல் விஜய்க்கானது அல்ல என்றும், அவர் கௌரவம் பார்க்காமல் பின்வாங்கிவிட்டு…

vijay politics

 

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளும் வலிமையாக இருக்கும் என்பதால், இந்த தேர்தல் விஜய்க்கானது அல்ல என்றும், அவர் கௌரவம் பார்க்காமல் பின்வாங்கிவிட்டு 2031 ஆம் ஆண்டு மீண்டும் அரசியலுக்கு வரலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.

விஜய் கட்சியின் கூட்டணிக்காக அதிமுக கதவை திறந்து வைத்திருந்த நிலையில், விஜய் அதை பயன்படுத்தாமல் பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், அதிமுக வேறு வழியின்றி பாஜகவுடன் கைகோர்த்து விட்டது.

அது மட்டும் இன்றி தேமுதிக, பாமக உள்பட சில கட்சிகளை இணைக்கவும், நாம் தமிழர் கட்சியை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே ஒரு பக்கம் அதிமுக பலமான அணியாகவும், இன்னொரு பக்கம் திமுக பலமான அணியாகவும் இருக்கும் நிலையில், இந்த இரண்டு மலைகளுடன் விஜய் மோதி எதையும் சாதிக்க முடியாது என்றும், எனவே அவர் இந்த தேர்தலில் பின்வாங்குவது நல்லது என்றும், இது அவருக்கான தேர்தல் இல்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் பேட்டி அளித்து வருகின்றனர்.

ஆனால் விஜய் பின்வாங்க வாய்ப்பு இல்லை என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரர்கள் கூறுகின்றனர். இளைய தலைமுறை ஓட்டு, கல்லூரி மாணவ மாணவிகளின் ஓட்டு மற்றும் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் பிடிக்காதவர்களின் ஓட்டு மொத்தமாக தனக்கு கிடைக்கும் என்றும், அதேபோல் சிறுபான்மையினர் ஓட்டையும் கவர்ந்து விட்டால், 50 முதல் 100 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெற்று விடலாம் என விஜய் உறுதியாக நம்புவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியை உள்பட ஒரு சில கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு, திமுகவிலிருந்து ஏதாவது கட்சிகள் பிரிந்து வந்தால் அந்த கட்சிகளையும் கூட்டணியாக வைத்துக் கொள்ளலாம் என்றும் விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு தேர்தல் கூட்டணியை இப்போது வரை கணிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. அரசியல் விமர்சகர்கள் விஜய் இந்த தேர்தலில் சாதிப்பது சந்தேகம் தான் என்பதையும் கூறி வருகின்றனர்.