சென்னை டூ விழுப்புரம்.. பயணிகளின் கனவை சத்தமே இல்லாமல் நிறைவேற்றிய தெற்கு ரயில்வே

By Keerthana

Published:

சென்னை: சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர் உள்பட 10 மின்சார ரெயில்கள் 12 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை, மேல்மருவத்தூர் – விழுப்புரம், விழுப்புரம் – மேல்மருவத்தூர், கடற்கரை – திருவண்ணாமலை உள்பட பல்வேறு வழித்தடங்களில் ரயில்களின் பெட்டிகள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை-மேல்மருவத்தூர், கடற்கரை – திருவண்ணாமலை, அரக்கோணம் – சேலம் உள்பட பல்வேறு தடங்களில் மெமு வகை மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் குறுகிய தூர(சுமார் 300 கி.மீ.வரை) மின்தொடர் பயணிகள் ரெயில்களாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்தவகை மின்சார ரெயில்களில் 8 பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. கழிவறை வசதி கொண்ட இந்த மின்சார ரெயில்களில் பயணிகள் அதிகமாக பயணிப்பதால், கூடுதலாக பெட்டிகளை இணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து சேலம் – மயிலாடுதுறை, மயிலாடுதுறை – சேலம், சென்னை கடற்கரை – மேல்மருவத்தூர், மேல்மருவத்தூர் – சென்னை கடற்கரை, மேல்மருவத்தூர் – விழுப்புரம், விழுப்புரம் – மேல்மருவத்தூர், கடற்கரை – திருவண்ணாமலை, திருவண்ணாமலை – கடற்கரை, அரக்கோணம் – சேலம், சேலம் – அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்ற மெமு மின்சார ரெயில்களை இன்று (1-ந்தேதி) முதல் வரும் 31-ந்தேதிக்குள் 8 பெட்டிகளில் இருந்து 12 பெட்டிகளாக மாற்றி இயக்குவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக இன்று சேலம் – மயிலாடுதுறை, மயிலாடுதுறை – சேலம் இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் 8-லிருந்து 12 பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது. 31-ந்தேதிக்குள் மற்ற அனைத்து ரெயில்களும் 12 பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளது. 8 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயிலில் 800 இருக்கைகள் உண்டு. தற்போது கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பதால் 1,200 இருக்கைகளாக அதிகரிக்கும். இதனால் கூடுதலாக 50 சதவீதம் பேர் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.