உலகக்கோப்பை ஹாக்கி: டிரா ஆன போதிலும் இந்தியா முதலிடம்

Published:

உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தில் டிரா செய்த போதிலும் ’டி’ பிரிவில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை ஹாக்கி போட்டி சமீபத்தில் ஒடிசாவில் தொடங்கிய நிலைகள் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை எதிர்த்து விளையாடி அபாரமாக வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட நிலையில் இந்த போட்டியில் விறுவிறுப்பாக கோல் அடிக்க இரு அணி வீரர்களும் விளையாடினார். ஆனால் ஆட்டம் நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோள் அடிக்கவில்லை என்பதால் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் இந்தியா டி பிரிவில் கோல்கள் அடிப்படையில் முதல் இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தனது அடுத்த போட்டியை வேல்ஸ் அணியுடன் விளையாட உள்ளது என்பதும் இந்த போட்டி வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...