உலக்கோப்பை கால்பந்து: தோல்வி அடைந்த அணிகளுக்கு ரூ.200 கோடிக்கும் மேல் பரிசு!

By Bala Siva

Published:

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது என்பதும் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோத இருக்கும் இந்த இறுதிப் போட்டியை பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து பல பிரபலங்கள் கத்தார் நாட்டிற்கு குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் வெல்லும் அணி உலக கோப்பை சாம்பியன் அணி என்பதால் இன்றைய போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு அணி வீரர்களும் ஆவேசமாக சாம்பியன் பட்டத்திற்காக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த மொரோக்கோ மற்றும் குரோஷியா ஆகிய அணிகள் மோதின. மூன்றாம் இடத்தில் நடந்த இந்த போட்டியில் மொரோக்கோ அணியை வீழ்த்தி குரோஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து மூன்றாம் இடத்தைப் பெற்ற குரோஷியா அணிக்கு 225 கோடி ரூபாய் பரிசும் மூன்றாம் இடத்திற்கான போட்டியில் தோல்வி அடைந்த மொரோக்கோ அணிக்கு 205 கோடி ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை சாம்பியன் இடத்திற்கான போட்டியில் வெல்லும் அணிக்கும், 2வது இடத்தைப் பெறும் அணிக்கும் எத்தனை கோடி பரிசு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் உங்களுக்காக...