எம்எஸ் தோனியின் கேப்டன்சியில் குறை கண்டுபிடித்த வீரேந்திர சேவாக்!

Published:

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையேயான ஐபிஎல் 2023 தொடக்க ஆட்டத்தின் போது துஷார் தேஷ்பாண்டேவை இம்பாக்ட் பிளேயர் வீரராக கொண்டு வந்து இறுதி ஓவரில் பந்தை அவரிடம் ஒப்படைத்த முடிவு தோனிக்கு சாதகமாக அமையவில்லை.

தேஷ்பாண்டே நான்கு ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்து ஆட்டத்தின் இறுதி ஓவரில் தனது அணிக்கு தோல்வியை தேடித்தந்தார். முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், மொயீன் அலி போன்ற அனுபவமிக்க வீரர் இருக்கும் போது எதற்காக ஆவரை பயன்படுத்தவில்லை.

நடுவில் மொயீன் அலியின் ஓவரை தோனி பயன்படுத்தியிருந்தால், அவர் துஷார் தேஷ்பாண்டேவிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை. MS தோனி இதுபோன்ற தவறுகளைச் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரியும், கடைசி ஓவரில் தேஷ்பாண்டேவுடன் செல்ல தோனி எடுத்த முடிவு தனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும், ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை வித்தியாசமாக பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைத்ததாகவும் கூறினார்.

“இம்பாக்ட் மாற்று வீரரான துஷார் தேஷ்பாண்டேவுக்கு அவர்கள் புதிய பந்தை கொடுத்தபோது நான் ஆச்சரியப்பட்டேன். ஒருவேளை அவர்கள் ராஜ்வர்தன் ஹங்கர்கேகருக்கு புதிய பந்தை கொடுத்திருக்கலாம் என்று நினைத்தேன்,” என்று அவர் கூறினார்.

மேலும் உங்களுக்காக...