17 ஆண்டுகளாக பைனலில் மோதும் விராத் கோஹ்லி, ஜடேஜா மற்றும் கேன் வில்லியம்சன்..!

  சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டியில் விராட் கோலி, ஜடேஜா ஆகிய இந்திய வீரர்களும், வில்லியம்சன் என்ற நியூசிலாந்து வீரரும் பங்கேற்று விளையாட…

virat williamson

 

சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டியில் விராட் கோலி, ஜடேஜா ஆகிய இந்திய வீரர்களும், வில்லியம்சன் என்ற நியூசிலாந்து வீரரும் பங்கேற்று விளையாட உள்ளனர்.

இந்த மூவரும் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 4 முறை தங்களுடைய அணிக்காக அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் விளையாடி இருந்தனர். தற்போது, ஐந்தாவது முறையாக தங்களுடைய அணிக்காக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2008ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியபோது, இந்திய அணியில் விராட் கோலி, ஜடேஜா இருந்தனர். அதே நேரத்தில், நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் இருந்தார் என்பது முக்கியமான தகவல்.

அதேபோல், 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி, 2021ஆம் ஆண்டு உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப் போட்டி, 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டி ஆகிய போட்டிகளில் இதே மூவர் ஒரே மைதானத்தில் மோதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நான்கு முறை அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் விளையாடிய இந்த மூன்று வீரர்கள், தற்போது சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தங்களுடைய அணியின் வெற்றிக்காக மீண்டும் விளையாட உள்ளனர். 17 ஆண்டுகளாக விராட் கோலி, ஜடேஜா இந்திய அணியின் சார்பிலும், வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் சார்பிலும் விளையாடி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், ஐசிசி நடத்தும் போட்டிகளின் இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா நான்காவது முறையாக கேப்டனாக பங்கேற்கிறார். இதற்கு முன்பு, தோனி ஐசிசி நடத்திய நான்கு இறுதிப் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

virat jadeja willi