இன்றைய போட்டியை முக்கியத்துவம் உள்ள போட்டியாக மாற்றிய விராத் கோஹ்லி.. எப்படி தெரியுமா?

சாம்பியன்ஸ் காப்பியை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இருப்பினும், இன்று இந்த இரண்டு அணிகளும் மோத…

விராட் கோலி

சாம்பியன்ஸ் காப்பியை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இருப்பினும், இன்று இந்த இரண்டு அணிகளும் மோத உள்ளன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதலிடத்தையும், தோல்வியடையும் அணி இரண்டாவது இடத்தையும் பிடிக்கும் என்பது தெரிந்தது. மற்றபடி, அடுத்த சுற்றுக்கு செல்வதில் முக்கியத்துவம் இல்லாத போட்டியாக இருக்கும் நிலையில், திடீரென விராட் கோலி இந்த போட்டியை முக்கியத்துவம் உள்ள போட்டியாக மாற்றியுள்ளார்.

அதாவது, இது அவரது 300-வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆறு இந்திய வீரர்கள் 300 ஒருநாள் போட்டிகளை கடந்துள்ள நிலையில், விராட் கோலி ஏழாவது வீரராக இணைகிறார். இதுவரை 299 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 14,085 ரன்கள் அடித்துள்ளார். அவருடைய சராசரி ரன் ரேட் 58.20, ஸ்ட்ரைக் ரேட் 93.41.

ஒருநாள் போட்டிகளில் 51 சதங்கள், 73 அரைசதங்களை அடித்துள்ள அவர், அதிகபட்சமாக 193 ரன்கள் எடுத்து உள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி தான் விராட் கோலி ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

தற்போது 36 வயதான அவர், கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவரது 300-வது போட்டியில் ஒரு சதம் அடித்து இன்னொரு சாதனையை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!