இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. வருண் சக்கரவர்த்தி அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா பேட்டிங் செய்து, 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் சேர்த்தது. ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 79 ரன்கள் எடுத்தார்.
250 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி, 45.3 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அணி தோல்வி அடைந்தது.
இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால், பி பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியுடன் அரையிறுதி போட்டியில் மோத உள்ளது. அதேபோல், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மற்றொரு அரையிறுதி போட்டியில் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.