இன்று பஞ்சாப் ஜெயித்தால் 7ல் இருந்து 3வது இடம்.. கொல்கத்தா ஜெயித்தால் என்ன ஆகும்?

Published:

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் இன்று 53வது போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது.
இன்றைய போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் நான்கு இடங்களை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணி ஏற்கனவே 10 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி மற்றும் ஐந்தில் தோல்வி பெற்று 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முதல் நான்கு இடங்களுக்கு அதிக போட்டி இருப்பதை அடுத்து இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற வேண்டியது மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் கொல்கத்தா அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகளுடன் அதே எட்டாவது இடத்தில் இருக்கும்

இந்த ஐபிஎல் தொடரை பொருத்தவரை அனைத்து அணிகளுமே கிட்டத்தட்ட ஒரே புள்ளிகளில் தான் பெற்று உள்ளது என்பதும் குஜராத் மட்டுமே 16 புள்ளிகள் பெற்று கிட்டத்தட்ட அடுத்த சுற்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, லக்னோ, ராஜஸ்தான், பெங்களூர், மும்பை, பஞ்சாப் ஆகிய ஆறு அணிகளில் எந்த அணிகள் வேண்டும் ஆனாலும் அடுத்த மூன்று இடத்தைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதால் இனி வரும் போட்டிகளில் அனைத்து அணிகளுமே மிகவும் கவனத்துடன் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...