இன்று மழை இல்லை.. ஃபைனல் நிச்சயம்.. மைதானத்தில் குவிந்த ரசிகர்கள்..!

Published:

இன்று அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்யும் வாய்ப்பு குறைவு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து இன்று போட்டி நிச்சயம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் திருவிழாவின் இறுதி நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நேற்று நடைபெற திட்டமிட்ட நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக இன்று ஒத்திவைக்கப்பட்டது.

இன்று காலை மழை வரும் போல் சில தகவல்கள் கூறினாலும் தற்போது வந்துள்ள தகவலின் படி இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நிச்சயம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

cricket fans
இந்த நிலையில் தற்போது மைதானத்தில் டிக்கெட் அடுத்த ரசிகர்கள் குவிந்து உள்ளனர் என்பதும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாலிவுட் திரைப்பட பாடல்கள் முன்னணி பாடகர்கள், பாடகிகள் பாடி வருகின்றனர் என்பதும் அதை ரசிகர்கள் ரசித்து கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியாக 7 மணிக்கு இன்று டாஸ் போடப்படும் என்றும் அதன் பின் 7.30 மணிக்கு திட்டமிட்டபடி போட்டி தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்றைய போட்டி குஜராத்தில் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் நடைபெறும் என்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என்பது மஞ்சள் மயமாகி இருக்கும் மைதானத்தில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் உங்களுக்காக...