363 டார்கெட்டை நெருங்கி வந்த தென்னாப்பிரிக்கா.. இந்தியா -நியூசிலாந்து இறுதி போட்டியில் மோதல்..!

  சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணி கொடுத்த 363 என்ற இமாலய இலக்கை கிட்டத்தட்ட நெருங்கிய தென்னாப்பிரிக்க அணி இறுதியில் தோல்வி அடைந்தது. இதனை…

sa vs nz

 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணி கொடுத்த 363 என்ற இமாலய இலக்கை கிட்டத்தட்ட நெருங்கிய தென்னாப்பிரிக்க அணி இறுதியில் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று நடந்த இரண்டாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் எடுத்தது. ரச்சின் ரவீந்திரன் மற்றும் கேன் வில்லியம்சன் இருவரும் சதம் அடித்தனர்.

இதனை அடுத்து, 363 என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் டேவிட் மில்லர் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இருப்பினும், அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் மட்டுமே எடுத்து, 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதனால், தென்னாப்பிரிக்கா அணி போட்டியிலிருந்து வெளியேற, நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டியில் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெறுவது யார் என்பதை மார்ச் 9ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்!