நம் இந்திய கிரிக்கெட்டின் வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர். ஏனென்றால் இந்திய அணியின் நிலைமை குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவர்களுக்கு வாய் அடைக்கும் வகையில் செயல்பாட்டினை கொடுத்துக் கொண்டு வருகிறது.
அதற்கு நல்லதொரு உதாரணம் தற்போது நடக்கின்ற இங்கிலாந்துடன் கூடிய சுற்றுப்பயணம் தான். இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா இங்கிலாந்துடன் மூன்று இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரை மேற்கொண்டு வருகிறது.
இதில் இரண்டுக்கு ஜீரோ என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது. இருப்பினும் கூட ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இங்கிலாந்து அணி காணப்படுகிறது.
அந்த மூன்றாவது 20 ஓவர் போட்டி இன்றைய தினம் நடைபெற உள்ளது. இதற்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ஏனென்றால் கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்த இந்தியாவே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.