உங்கள் திருமணத்தில் நான் டான்ஸ் ஆடுகிறேன்.. KKR வீரருக்கு ஷாருக்கான் அளித்த வாக்குறுதி..!

Published:

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் உள்ள முக்கிய வீரரின் திருமணத்தில் நான் கலந்து கொண்டு நடனமாடுவேன் என நடிகர் ஷாருக் கான் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கடைசி ஓவரில் 30 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. முதல் பந்தில் ஒரு ரன் அடுத்து உமேஷ் யாதவ், ரிங்கு சிங்கிற்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். 5 பந்துகளில் 29 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற அசாதாரண நிலை இருந்தபோது கொல்கத்தா அணியில் உள்ள பலவீரர்களுக்கே நம்பிக்கை இல்லை. வர்ணனையாளர்களும் இது சாத்தியமில்லை என்ற கூறினார்.

ஆனால் முதல் 3 பந்துகளில் 3 சிக்சர் அடித்தவுடன் பலருக்கு நம்பிக்கை வந்தது இருப்பினும் அடுத்த இரண்டு பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அடுத்த இரண்டு பந்துகளையும் சிக்ஸர் அடித்த ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தார். யாராலும் நம்ப முடியாத வெற்றி என்று இது கூறப்பட்டது.

rinku singhஇந்த நிலையில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் உங்கள் திருமணத்திற்கு நான் வந்து டான்ஸ் ஆடுகிறேன் என்று ரிங்கு சிங்கிற்கு வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஒரே ஓவரில் ஐந்து சிக்சர்கள் அடித்து ரசிகர்களை மனதில் நீங்கா இடம் பிடித்த ரிங்குசிங் திருமணத்தில் ஷாருக்கான் நடனம் ஆடினால் அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ரிங்குசிங். அவருடைய தந்தை கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்பவர் என்பதும் அண்ணன் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகன் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக அவரது தந்தை மிகப்பெரிய தியாகம் செய்தார் என்பதும் கிரிக்கெட் மீது அவருக்கு மிகப்பெரிய விருப்பம் என்பதை அறிந்து அவர் இஷ்டம் போல் அவரை கிரிக்கெட் விளையாட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தினர் செய்த தியாகத்திற்கு தற்போது அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...