ஐந்தாவது முறையாக ஒற்றை இலக்க ரன்கள்.. ஓய்வு எடுக்க வேண்டுமா ரோஹித் சர்மா?

Published:

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐந்தாவது முறையாக ஒற்றை இலக்கு எண் ரன்களில் அவுட் ஆகி இருப்பதை அடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. சீனியர் கிரிக்கெட் வீரர்கள் கூறிய போது ரோகித் சர்மா மனதளவில் விளையாட்டுக்கு தயாராக சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்ற போதிலும் நேற்றைய போட்டியிலும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட் ஆனார். இதன் மூலம் அவர் மோசமான சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளார்

ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்த ஒரே பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தான் என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் இதற்கு முன்பு நான்கு முறை ஒற்றை இலக்க எண்ணில் ஒரு சில பேட்ஸ்மேன் அவுட் ஆகி உள்ள நிலையில் ஐந்து முறை ஒற்றை இலக்க எண்ணில் விக்கட்டை பறிகொடுத்தது ரோகித் சர்மா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா களத்தில் இறங்கிவிட்டால் பந்துகள் பவுண்ட்ரி மற்றும் சிக்சருக்கு பறக்கும் என்று ஒரு காலத்தில் இருந்த நிலையில் தற்போது அவரது விக்கெட் முதல் ஓவரிலேயே விழுந்து விடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரோகித் சர்மாவின் மோசமான பார்ம் காரணமாக அவர் சில காலங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு மனதளவில் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர். மும்பை அணிக்கு மட்டும் என்று இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக உள்ள ரோஹித் சர்மா உலக கோப்பை நெருங்கி வரும் நிலையில் மோசமான பார்மில் இருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உங்களுக்காக...