நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி 14 புள்ளிகள் உடன் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் கிளாஸன் அபாரமாக சதம் அடித்ததை அடுத்து 187 என்ற இலக்கு பெங்களூரு அணிக்கு கொடுக்கப்பட்டது. கிளாஸனுக்கு பதிலடியாக விராட் கோலி அதிரடியாக சதம் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவருக்கு துணையாக இருந்த கேப்டன் டூபிளஸ்சிஸ் 71 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில் நேற்றைய வெற்றிக்கு பின்னர் பெங்களூர் அணி தற்போது 14 புள்ளிகள் இடம் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி குஜராத் அணியுடன் இன்னும் ஒரு போட்டியில் மட்டும் மோத உள்ளது. அந்த போட்டியில் வெற்றி பெற்று விட்டால் அது அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெங்களூர் அணியின் வெற்றி காரணமாக சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்று விட்டால் மேற்கண்ட 3 அணிகளும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் அந்த அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் ஒரு சிறிய வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி தான் சிஎஸ்கே அணியின் தலைவிதியை நிர்ணயம் செய்யும். நாளைய போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று விட்டால் எளிதாக இரண்டாவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். மாறாக தோல்வி அடைந்தால் லக்னோ, மும்பை மற்றும் பெங்களூர் அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து சிஎஸ்கே அணி அடுத்த சுற்று செல்லும் வாய்ப்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே நாளை டெல்லி அணியை தல தோனி தோற்கடித்துவிட்டால் கிட்டத்தட்ட சிஎஸ்கே அணி கோப்பையை நெருங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.