ஒரே சீசனில் ஐந்து முறை 200க்கும் அதிகமான ரன்கள்: மும்பை சாதனை..!

Published:

ஒரே சீசனில் ஐந்து முறை 200 ரன்களுக்கு மேல் அடித்த அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றுள்ளதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஐபிஎல் தொடர் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதில் மும்பை அணி இன்று 218 ரன்கள் அடித்து அபாரமாக பேட்டிங் செய்தது. இந்த நிலையில் இதற்கு முன் மும்பை அணியின் நான்கு முறை 200 மற்றும் 200க்கும் அதிகமான ரன்கள் அடித்துள்ள நிலையில் ஒரே சீசனில் ஐந்து முறை 200 ரன்களுக்கும் மேல் அடித்த அணி என்ற பெருமையை மும்பை பெறுகிறது.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மும்பை அணி 201 ரன்கள் அடித்தது ஆனால் அந்த போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து ஏப்ரல் 30ஆம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிராக 214 ரன்கள் அடித்தது என்பதும் அந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக மே 3ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக மீண்டும் 206 ரன்கள் அடித்த மும்பை அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றது. நான்காவது மே ஒன்பதாம் தேதி நடந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை அணி 200 ரன்கள் எடுத்தது என்பதும் அந்த போட்டியில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் ஆச்சரியமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மும்பை அணி, குஜராத் அணிக்கு எதிராக  218 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய போட்டியில் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

200 மற்றும் அதற்கு மேல் மும்பை அணி அடித்தபோது மூன்று முறை வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...