கடைசி பந்தில் நோபால்.. கையில் இருந்த வெற்றியை பறிகொடுத்த ராஜஸ்தான்..!

By Bala Siva

Published:

நேற்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணியின் சந்திப் சர்மாகடைசி பந்தை நோபால் ஆக போட்டு ஹைதராபாத் அணிக்கு வெற்றியை தேடி தந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 52வது போட்டியில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. ஜாஸ் பட்லர் மிக அபாரமாக விளையாடி 95 ரன்கள் எடுத்தார் என்பதும் கேப்டன் சஞ்சு ஜான்சன் 66 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

srh winஇதனை அடுத்து 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஹைதராபாத் விளையாடியது. இந்த போட்டி விறுவிறுப்பாக இருந்த நிலையில் கடைசி ஓவரில் ஹைதராபாத் அணி 5 ரன்கள் எடுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. முதல் பாலில் இரண்டு ரன்கள் இரண்டாவது பாலில் ஆறு ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் கடைசி பந்தில் ஐந்து ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் கடைசி பந்தை வீசிய சந்திப் சர்மா விக்கெட் எடுத்தார். ஆனால் அந்த பந்து நோபால் என அறிவிக்கப்பட்டதை அடுத்து கடைசி பந்தில் நான்கு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஹைதராபாத் அணிக்கு ஏற்பட்டது.

கடைசி பந்தை சந்தித்த அப்துல் சமத் ஒரு சிக்சர் அடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இந்த நிலையில் கடைசி பந்தை நோபால் ஆக வீசியதால் ராஜஸ்தான் அணி தனது கையில் இருந்த வெற்றியை ஹைதராபாத் அணிக்கு பறிகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியின் முடிவில் புள்ளி பட்டியலில் ஹைதராபாத் அணி 8 புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.