SRH வெற்றி பெற்றவுடன் காவ்யா மாறன் கட்டிப்பிடித்தது யாரை தெரியுமா? வைரல் வீடியோ..!

  ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் பஞ்சாப் கிங்ஸ்  இடையிலான ஆட்டத்தின் போது, SRH உரிமையாளர் கவ்யா மாறன் SRH ஓப்பனராக விளையாடும் அபிஷேக் ஷர்மாவின் பெற்றோர் மஞ்சு ஷர்மா மற்றும்…

kavya maran

 

ஐபிஎல் 2025 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் பஞ்சாப் கிங்ஸ்  இடையிலான ஆட்டத்தின் போது, SRH உரிமையாளர் கவ்யா மாறன் SRH ஓப்பனராக விளையாடும் அபிஷேக் ஷர்மாவின் பெற்றோர் மஞ்சு ஷர்மா மற்றும் ராஜ்குமார் ஷர்மாவுடன் உளமார்ந்த அரவணைப்பை பகிர்ந்து கொண்ட நெகிழ்வூட்டும் தருணம் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அபிஷேக் ஷர்மா, இந்த போட்டியில் வெறும் 55 பந்துகளில் 141 ரன்கள் அடித்து மின்னினார். அவரது சதம் 40 பந்துகளில் வந்தது. இது IPL வரலாற்றில் இந்தியர் ஒருவரால் அடிக்கப்பட்ட மூன்றாவது வேகமான சதமாகும். இந்த சாதனையை அவர் உணர்வுப்பூர்வமாக கொண்டாடினார்; “This Is For SRH Family” என எழுதிய குறிப்பு ஒன்றை கையில் பிடித்துக் காட்டினார்.

இந்த சீசனில் 24, 6, 1, 2 மற்றும் 18 என்ற குறைந்த ரன்களுடன் கடினமான தொடக்கத்தை எதிர்கொண்ட அபிஷேக், இந்த ஆட்டத்தில் அதிரடியாய் திரும்பியதோடு, SRH அணிக்கும் நம்பிக்கை நொடியில் வந்தது. தொடக்க வெற்றிக்கு பின் தொடர்ச்சியான தோல்விகளில் சிக்கிய SRH, அபிஷேக் ஷர்மாவின் இந்த அதிரடி இன்னிங்ஸால், 246 ரன்கள் என்ற பெரிய இலக்கை வெறும் 18.3 ஓவர்களில் கடந்து சென்றது.

இந்த போட்டியின் முதல் பாதியில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யும்போது பந்துகள் பௌண்டரிக்கும் சிக்ஸருக்கும் பறக்கும்போது SRH அணி உரிமையாளர் காவியா மாறனின் முகம் இறுகியதாக இருந்தது. குறிப்பாக 200 ரன்களுக்கு மேல் சென்ற பிறகு அவர் உச்சகட்ட டென்ஷனில் இருந்தார் என்பது அவரை ஒவ்வொரு முறை கேமராவில் காண்பிக்கும் போது தெரிந்தது.

இந்த நிலையில் SRH பேட்டிங் செய்யும் போது தான் அவரது முகத்தில் சிரிப்பையே பார்க்க முடிந்தது. குறிப்பாக அபிஷேக் ஷர்மா அவுட் என்று அறிவிக்கப்பட்டு அதன் பின் அந்த பந்து நோ-பால் என்ற அறிவிக்கப்பட்ட பிறகு அவர் துள்ளி குதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா வெற்றிக்கான ரன்னை அடித்தவுடன் உடனே காவியா மாறன் அவருடைய அம்மாவை சென்று கட்டி பிடித்து தனது நன்றியை தெரிவித்தார். அவருடைய அப்பாவுக்கும் கை கொடுத்தார். இந்த காட்சிகள் தான்  அன்றைய போட்டியின் ஹைலைட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

https://x.com/IPL/status/1911109071568003326