இரட்டை சதம் அடித்த இஷான் கிஷான், சதத்தை நெருங்கும் கோஹ்லி.. குவியும் ரன்கள்!

Published:

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே இன்று 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்த நிலையில் விராட் கோலி சதம் அடிக்கும் நிலையில் உள்ளார்.

இன்று நடைபெற்ற இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

ishan kishan11

இந்திய அணி சற்றுமுன் வரை 37 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர கிஷான் கிஷான் 210 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானர்.

மேலும் விராத் கோஹ்லி தற்போது 91 அடித்து உள்ள நிலையில் அவரும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 37 ஓவர்களில் இந்திய அணி 314 ரன்கள் எடுத்த நிலையில் 400 ரன்களை நெருங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 3-வது போட்டியில் வீறுகொண்டு எழுந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.

மேலும் உங்களுக்காக...