ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த 15 ஃபைனல்கள்.. முழு விபரங்கள்..!

Published:

ஐபிஎல் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு கிரிக்கெட் திருவிழாவாக மாறிய நிலையில் இதுவரை 15 சீசன் முடிவடைந்து இந்த ஆண்டு 16-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் இறுதிப்போட்டியில் நாளை நடைபெற உள்ள நிலையில் நாளைய இறுதி போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன

ஏற்கனவே சிஎஸ்கே அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் இந்த ஆண்டு வென்றால் ஐந்தாவது முறையாக வென்ற அணி என்ற சாதனையை செய்யும். ஏற்கனவே மும்பை ஐந்து முறை கோப்பையை வென்றுள்ள நிலையில் அதன் சாதனையை சமன் செய்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் குஜராத் அணி வென்றால் தொடர்ச்சியாக இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற சாதனை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த ஆண்டு அறிமுகமான குஜராத் அணி முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த ஆண்டும் கோப்பையை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஐபிஎல் இறுதிப் போட்டியை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி உள்ளது என்பதும் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது கூட மிகக் குறைந்த வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தான் சிஎஸ்கே அணி கோப்பையை தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுவரை நடந்த 15 ஐபிஎல் போட்டி தொடரின் இறுதிப்போட்டியில் வென்ற அணிகள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்

2008 – இறுதி: ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே-ஐவென்றது.

2009 – இறுதி: டெக்கான் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வென்றது.

2010 – இறுதி: சிஎஸ்கே 22 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது.

2011 – இறுதி: சிஎஸ்கே 59 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வென்றது.

2012 – இறுதிப் போட்டி: கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே-ஐ வென்றது.

2014 – இறுதிப் போட்டி: கொல்கத்தா 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை

2015 – இறுதிப் போட்டி: மும்பை 41 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே-ஐ வென்றது.

2018 – இறுதிப் போட்டி: சிஎஸ்கே 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது.

2019 – இறுதி: மும்பை 1 ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே-ஐ வென்றது.

2020 – இறுதிப் போட்டி: மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது.

2021 – இறுதி: சிஎஸ்கே 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது.

2022 – இறுதி: குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வென்றது.

மேலும் உங்களுக்காக...