ரோஹித் சர்மா பிறந்த நாளில் வெற்றி பரிசு கொடுத்த மும்பை இந்தியன்ஸ்.. 1000வது போட்டியில் சாதனை வெற்றி..!

Published:

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணி அபாரமாக வெற்றி பெற்று ரோகித் சர்மாவுக்கு பிறந்தநாள் பரிசு அளித்துள்ளது.

நேற்று மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் நேற்று 1000வது போட்டி நடைபெற்றது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய நிலையில் 15 ஆண்டுகளில் மொத்தம் ஆயிரம் போட்டிகள் இதுவரை முடிவடைந்துள்ளன என்பதும் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டி 1000வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

ipl1000ஐபிஎல் 1000 வது போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் அடித்தது. தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் 124 ரன்கள் அடித்தார் என்பதும் அதில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் மூன்று பந்துகளில் மும்பை அணியின் டிம் டேவிட் மூன்று சிக்ஸர்கள் அனைத்து ரோகித் சர்மாவுக்கு தனது பிறந்தநாள் பரிசை கொடுத்தார்.

இதனை அடுத்து மும்பை அணி புள்ளி பட்டியலில் தற்போது ஏழாவது இடத்தில் முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தாலும் 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...