தொடரை வென்றது இந்தியா; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!!

இன்று இந்தியா இங்கிலாந்து இடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாசை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் பேட்டிங் செய்த…

India West Indies Cricket 71 1644324813221 1644324845159

இன்று இந்தியா இங்கிலாந்து இடையே மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் டாசை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனால் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடர்ந்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இருப்பினும் இங்கிலாந்தை ஒரு கரம் கொண்டு இழுத்து சென்றார் கேப்டன் பட்லர்.

ஏனென்றால் அவர் மட்டுமே அதிக வசமாக 60 ரன்கள் எடுத்து அணியை ஓரளவிற்கு தாங்கி பிடித்தார். இதனால் பெரும் 259 ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இங்கிலாந்து அணி இழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் பாண்டியா நான்கு விக்கெட்டுகள் எடுத்தார். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

ஒரு கட்டத்தில் நிதானமாக விளையாடிய ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை இழக்காமல் அபாரகரமாக சதம் அடித்தார். அவருக்கு உதவியாக கை கொடுத்தார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

ஏனென்றால் அவரும் 71 ரன்கள் எடுத்து விக்கட்டை இழந்தார். இதனால் வெறும் 42வது ஓவரில் நிர்ணயித்த இலக்கை இந்தியா கடந்து வெற்றியினை பெற்றது. மேலும் இந்த வெற்றியின் மூலம் தொடரையும் இந்தியா வென்றுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன