ஒரு நாள் போட்டியில் ‘முதல் சதம்’.! அதிரடி காட்டிய விக்கெட் கீப்பர் ‘ரிஷப் பண்ட்’!!

Published:

இன்றைய தினம் இந்தியாவில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியின் முடிவில் எந்த அணி தொடரை வெல்லும் என்பது தெரியவரும்.

ஏனென்றால் இதற்கு முன்பு நடந்த இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து தலா ஒரு வெற்றியினை பெற்றுக் கொண்டுள்ளது. எனவே இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக காணப்பட்டு வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்த அணி 259 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் 260 ரன்கள் எடுத்தால் வெற்றி மற்றும் தொடரை வென்று விடலாம் என்ற முனைப்போடு களமிறங்கிய இந்திய வீரர்கள் வரிசையாக தங்களது விக்கட்டுகளை பறிகொடுத்து கொண்டு வந்தனர்.

இதில் நிதானமாக விளையாடிய பண்ட் தற்போது சதம் விலாசி அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். மேலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும் ரிஷப் பண்ட் தனது சர்வதேச 50 ஓவர் போட்டியில் முதல் செஞ்சூரியை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் இவரோடு அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இருப்பினும் நிதானமாக விளையாடும் ரிஷப் பந்து அணியை வெற்றி பெற வைத்து கடைசிவரையும் விக்கெட்டை இழக்கவில்லை.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment