இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்தவர்கள் எண்ணிக்கை.. கிட்டத்தட்ட நாட்டின் மக்கள் தொகையில் பாதி..!

  சாம்பியன்ஸ் ஹாப்பி கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே கிரிக்கெட்…

virat

 

சாம்பியன்ஸ் ஹாப்பி கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பரபரப்பாக இருக்கும். குறிப்பாக, இந்திய ரசிகர்கள் வெறித்தனமாக அந்த போட்டியை பார்த்து, இந்திய வீரர்களுக்கு ஊக்கத்தை கொடுத்து வருவார்கள்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் நேரடியாக ஒளிபரப்பு செய்தது. இந்த போட்டியை சுமார் 60.20 கோடி பேர் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில், கிட்டத்தட்ட மொத்த மக்கள் தொகையின் பாதி பேர் இந்த போட்டியை நேரடியாகவும், தொலைக்காட்சிகளிலும், செயலிகளிலும் கண்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.