இந்தியா மீண்டும் படுதோல்வி: அடுத்த சுற்றுக்கு செல்லுமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது என்றே கூறலாம்
இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 111 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 14.3 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது என்பதும், இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வென்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொருத்திய இந்திய அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சிறிய அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது