இரண்டாவது போட்டியில் மாபெரும் வெற்றி; தொடரை வென்றது இந்தியா!!

Published:

நம் இந்திய கிரிக்கெட் அணி தற்போது  இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் ஒன்று உள்ளது. தற்போது அந்த தொடர் தான் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இதில் முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. முதல் போட்டியில் ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏனென்றால் அவர் பேட்டிங்கில் அரைசதம் அடித்ததோடு மட்டுமல்லாமல் பௌலிங்கில் நான்கு விக்கட்டுகளை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இரண்டாவது போட்டி இன்று நள்ளிரவில் நடைபெற்றது. இதில் டாசை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்த சவாலான இலக்கை இங்கிலாந்தின் வீரர்கள் எதிர்கொள்ள தடுமாறியது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் தொடர்ந்து இந்திய அணியின் பவுலர்கள் விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ரூபாய் ஓவர் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு 0 மற்றும் கணக்கில் வென்று அபாரம் செய்துள்ளது. பர்மின்ஹாமில் நடந்த இரண்டாவது 20 ஓவர் போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.

முதலில் விளையாடிய இந்தியா எட்டு விக்கட்டுக்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 40 ரன்களும், ரோகித் சர்மா 31 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 17வது ஓவரில் 121 ரன்கள் எடுத்து அணைத்து விக்கட்டுகளையும் இழந்தது. புவனேஷ்வர் குமார் மூன்று விக்கெட்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment