2nd T20: இந்திய அணி பேட்டிங்; பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து!!

By Vetri P

Published:

நம் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் ஆக்ரோஷமான குணத்தில் உள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் கடந்த சில நாட்களாக இந்தியா அணியில் சில தடுமாற்றங்கள் நிகழ்ந்தது. அந்த தடுமாற்றத்திற்கு உதாரணம் தென்னாப்பிரிக்கா அணியோடு நடந்த ஐந்து 20 ஓவர் போட்டிகள் தான்.

இதில் பாடம் கற்ற கொண்ட இந்தியா தற்போது சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது. அதன்படி தற்போது இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5, 20 ஓவர் கொண்ட தொடரை மேற்கொண்டு வந்துள்ளது.

மேலும் இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றியைக் கண்டது, அதிலும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதனால் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் சற்று ஆக்ரோஷமாக இருப்பார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி தற்போது தொடங்கியுள்ளது இந்த போட்டியில் டாசை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியிலும் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் உங்களுக்காக...

Leave a Comment