கோப்பையை மிஸ் பண்ணியிருக்கலாம்.. ஆனால் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அதிக வருமானம்..!

Published:

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா நேற்று நூலிழையில் ஐபிஎல் கோப்பையை தவறவிட்டாலும் இந்த ஐபிஎல் சீசனில் அதிகமாக சம்பாதித்தவர் அவர்தான் என்ற தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் 2023க்கான இறுதிப் போட்டி நேற்று சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ், ஹர்திக் பாண்டியாவின் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி நிமிடத்தில் வெற்றி த்ரில் வெற்றி பெற்றது. இருப்பினும், போட்டியின் மூலம் கோடிகளை சம்பாதித்த ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த ஐபிஎல் சீசன் உண்மையான வெற்றியாக அமைந்தது.

குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2023 சீசனில் அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருந்தார். ஐபிஎல் 2023 ஏலத்தில் அவரது ஏலம் 15 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தது.

ஹர்திக் பாண்டியா ஐபிஎல் மூலம் எவ்வளவு சம்பாதித்தார் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அணியின் ஏலத்தொகை மற்றும் ஒரு போட்டிக்கான சம்பளத்தின்படி, குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் ஐபிஎல் மூலம் ரூ.74 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.

ஹர்திக் கடந்த 2015ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். அப்போது சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருந்த அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார், அங்கு அவர் தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். 2021ஆம் ஆண்டு அவர் அணியிலிருந்து வெளியேறினார். 2022 இல் புதிதாக உருவாக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஆனார். அதே ஆண்டில் அவர் கோப்பையையும் பெற்று தந்தார்.

அவர் 2015 ஆம் ஆண்டில் ஐபிஎல் விளையாடத் தொடங்கியபோது, அவரது ஐபிஎல் சம்பளம் முழு சீசனுக்கும் வெறும் ரூ. 10 லட்சம் என்பது அதிர்ச்சியான செய்தி ஆகும், ஆனால் 2023ல் சீசனில் அவரது சம்பளம் 15 கோடி. தனது போட்டிக்கான சம்பளம் மட்டுமின்றி செயல்திறனுக்கான போனஸ் ஆகியவற்றை சேர்த்தால், இன்னும் சில கோடிகள் அதிகமாகும்.

ஹர்திக் பாண்டியா தனது ஐபிஎல் 2023ஆம் ஆண்டில் ஐபிஎல் சம்பளத்தைத் தவிர, பிராண்ட் ஒப்பந்தங்கள் மற்றும் வணிக முதலீடுகள் மூலமாகவும் பெரும் செல்வத்தை சம்பாதித்தார்., கடந்த சில ஆண்டுகளாக அவரது ஆண்டு வருமானம் ரூ. 1.5 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

பல செய்தி நிறுவனங்களின்படி, குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ.91 கோடிக்கு மேல் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.

மேலும் உங்களுக்காக...