ஐபிஎல் ஏலத்தில்.. முதல் ஆளாக Unsold ஆன இளம் வீரர்.. கூடவே அந்த இரண்டு சீனியர் வீரர்களையும் எடுக்கல..

By Ajith V

Published:

ஐபிஎல் மெகா ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 3 வீரர்கள் 20 கோடி ரூபாய் கடந்து அதிக தொகைக்கு ஏலம் போயிருந்தனர். அதிலும் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிப் பந்த் ஆகிய ருவரும் முதல் இரண்டு வீரர்களாக ஐபிஎல் மெகா ஏலத்தில் 25 கோடி ரூபாயை தாண்டி வரலாற்று படைத்துள்ளனர். இதே போல மற்ற சில வீரர்கள் 20 கோடி ரூபாயை தாண்டுவார்கள் என எதிர்பார்த்த போது அவர்கள் யாருமே அந்த தொகையை தொடவில்லை.

ஆனால், யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஒரு இளம் இந்திய வீரர் 20 கோடி ரூபாயை தாண்டி சரித்திரம் படைத்திருந்தார். கொல்கத்தா அணிக்காக ஆடி வந்த வெங்கடேஷ் ஐயரை மீண்டும் அதே அணி, 23.75 கோடி ரூபாய்க்கு சொந்தமாக்கி இருந்தது. அவர்களுடன் கடைசி வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி போட்டி போட்டு பார்த்தும் அவர்களை வீழ்த்தி வெங்கடேஷ் ஐயரை சொந்தமாக்கி இருந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இதன் காரணமாக, ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு பிறகு அதிக தொகைக்கு ஏலத்தில் போன வீரர் என்ற சிறப்பும் யாரும் எதிர்பாராத வெங்கடேஷ் யருக்கு கிடைத்துள்ளது. மேலும் இந்த முறை பல வீரர்களும் யாரும் நினைத்து பார்க்கா அணிகளிலும் ஏலத்தில் சென்றுள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் என வரும் போது பல அணிகளும் புதுமையாக கட்டமைக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Unsold ஆன இளம் வீரர்..

அப்படி ஒரு சூழலில் இந்த முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த சில வீரர்கள் Unsold என றிவிக்கப்பட்டுள்ளது அதிக அதிர்ச்சியையும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. இளம் வீரராக முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த தேவ்த் படிக்கல், ஐபிஎல் தொடரிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக சிறப்பான தொடக்க வீரராகவும் இருந்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ஆடிவரும் தேவ்த் படிக்கல், மெகா ஏலத்தில் முதல் வீரராக Unsold என அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை தொடர்ந்து டேவிட் வார்னர், பேர்ஸ்டோ உள்ளிட்ட வீரர்களையும் எந்த அணிகளும் எடுக்க முன்வரவிலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீரர்கள் நிச்சயம் பல அணிகளுக்கும் தொடக்க வீரர்களாக பல அணிகளுக்கு முத்திரை பதிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.