இந்திய கிரிக்கெட் என்று கூறினாலே அனைவரது நினைவிற்கு வரும் பெயர் மகேந்திர சிங் தோனி. தல, கேப்டன் கூல் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் தோனியின் 42-வது பிறந்த நாள் நேற்று முடிவடைந்தது. அவர் பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்திய அளவில் அதிகம் பாராட்டப்பட்ட நபர்களில் இரண்டாவது இடத்தில் தோனி இருக்கிறார். இது பற்றி அவரிடம் அதிகம் பாராட்டப்பட்ட நபர்களில் மோடியும் ஒருவர் என்று கூறிய போது நானும் அரசியலில் நிற்கட்டுமா என்று கேலியாக கேட்டுள்ளார். ஆனால் அரசியல் பற்றி தோனி பேசும்போது அதற்கு நிறைய படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்தியா போன்ற பெரிய நாட்டில் அரசியல்வாதியாக இருப்பது கடினமான வேலை என்று தோனி கூறியுள்ளார்.
தோனியின் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்றால் இரண்டு உள்ளதாம். ஒன்று 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய போது 10 ரன் தேவை என்ற சமயத்தில் மைதானத்தை சுற்றி இருந்த ரசிகர்கள் வந்தே மாதரம் பாடலை பாடியுள்ளனர். இதை மைதானத்தில் இருந்து கேட்ட தருணத்தை அவர் மறக்க மாட்டாராம்.
அதேபோன்று 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர் சமயத்தில் தான் தோனியின் செல்ல மகள் Ziva பிறந்துள்ளார். இதனால் ஒன்றரை மாதம் கழித்து தான் தனது மகள் Ziva-வை தோனி பார்க்க சென்றுள்ளார். அப்போது குழந்தையை கையில் எடுத்த போது Ziva அதிகமாக சத்தமிட்டுள்ளார். அதை பச்சிளம் குழந்தை தாமதமாக தன்னை பார்க்க வந்த தந்தையை திட்டுவது என்று கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். அந்த தருணத்தையும் தோனி மறக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
இனிவரும் காலத்தில் குழந்தைகள் நம்மைப் போன்று வளராது என்று கூறிய தோனி அவரது இளமை பருவத்தில் வீட்டில் தந்தை ஒரு அறையில் இருந்தால் அவர் மற்றொரு அறையில் தான் இருப்பாராம். ஆனால் வரும் காலத்தில் மகன் தந்தையை குடிக்க சகஜமாக அழைத்து தந்தை தான் குடிக்க மாட்டேன் என்று கூறும் நிலை வரும் என்று கேலியாக கூறியுள்ளார்.