வெண்மையான சுத்தமான பிளாட்டினம் பற்றிய சில அரிய தகவல்கள்…!

Published:

பிளாட்டினம் என்றதும் நினைவுக்கு வருவது அதன் தூய வெண்மையான நிறம் தான். அன்பை வெளிப்படுத்திட யாருக்கேனும் ஆபரணம் பரிசாக அளிக்க வேண்டும் என்றால் பலருக்கும் நினைவு வருவது பிளாட்டினம் தான். ஆபரணங்கள் செய்வது மட்டுமின்றி பிளாட்டினம் பல பயன்பாடுகளில் உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த பிளாட்டினம் பற்றி பலர் அறியாத சில அரிய தகவல்களை நாம் பார்க்கலாம்.

1. பிளாட்டினம் மிகவும் அரிய வகையான உலோகம் ஆகும். தங்கத்தை விட 30 மடங்கு குறைவாகத்தான் பிளாட்டினம் கிடைக்கிறது. பிளாட்டினம் தென் ஆப்பிரிக்காவில் அதிகம் கண்டெடுக்கப்படுகிறது.

istockphoto 453256733 612x612 1

2. பிளாட்டினம் மிகவும் உறுதியான உலோகம் ஆகும். தங்கத்தை அரித்திடும் அமிலங்கள் கூட பிளாட்டினத்தை சேதப்படுத்திட முடியாது.

3. பிளாட்டினம் புற்று நோயை எதிர்த்து போராடும் ஆற்றல் உடையது. 50 சதவீத புற்றுநோயாளிகளுக்கு பிளாட்டினம் உள்ளடங்கிய மருந்துகளே சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது. பிளாட்டினம் ஆனது புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுத்திடும்.

4. பிளாட்டினம் எந்தவித நச்சுத் தன்மையும் ஏற்படுத்திடாத உலோகம் ஆகும். மேலும் பிளாட்டினம் அணிவதால் யாருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டதும் இல்லை. எனவேதான் பல் மருத்துவத்தில் செயற்கை பல் பொருத்துதல், மருந்து தயாரித்தல், ஆபரணங்கள் செய்தல் என பல பயன்பாடுகளில் பிளாட்டினம் ஈடுபடுத்தப்படுகிறது.

5. காற்றில் கருத்துப் போகக் கூடிய தன்மை பிளாட்டினத்திற்கு கிடையாது.

6. பிளாட்டினம் வெள்ளியை ஒத்த தோற்றத்தை கொண்டதால் இது பிளாட்டினா என்ற ஸ்பானிஷ் வார்த்தையில் இருந்து வந்தது. இந்த பிளாட்டினா என்ற வார்த்தையின் பொருள் சிறிய வெள்ளி என்பதாகும்.

images 3 30

7. தங்கம் வெள்ளி இவற்றுடன் ஒப்பிடுகையில் பிளாட்டினத்தின் உருகுநிலை மற்றும் கொதிநிலை மிகவும் அதிகமாகும். இதன் உருகுநிலை 3215°F பிளாட்டினத்தின் கொதி நிலை 6917°F.

மிகவும் அரிதான இந்த பிளாட்டினம் சிறந்த முதலீடாக பலர் கருதுகிறார்கள்.

மேலும் உங்களுக்காக...