5 ஓவர்களில் 23 ரன்கள் 5 விக்கெட் இழந்து டெல்லி அணி ஒரு கட்டத்தில் தத்தளித்து கொண்டிருந்த நிலையில் அந்த அணியை அமன் கான் தனி ஒருவராக ஓரளவுக்கு ஸ்கோரை உயர்த்தி கொண்டு வந்துள்ளார்.
இன்றைய போட்டி டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில் டெல்லி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் முதல் ஓவர் முதல் பந்திலையே தொடக்க ஆட்டக்காரர் சால்ட் அவுட் ஆன நிலையில் இரண்டாவது ஓவரில் கேப்டன் டேவிட் வார்னர் ரன் அவுட் முறையில் அவுட் ஆனார்.
இதனை அடுத்து 3 முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆக ஒரு கட்டத்தில் டெல்லி அணி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் களம் இறங்கிய அமன் கான் ஓரளவு நிலைத்து ஆடி 51 ரன்கள் எடுத்தார் என்பதும் அவருக்கு ஆதரவாக அக்ஸர் பட்டேல் மற்றும் ரிபில் பட்டேல் ஆதரவாக ஆகியோர் பேட்டிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 130 ரன்கள் எடுத்துள்ளன. நேற்று பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 126 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றி பெற்ற நிலையில் இன்று அதே போல் டெல்லி அணி குஜராத் அணியை 1330 ரன்களுக்குள் சுருட்டி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.