sஎன்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது
இதனை அடுத்து சுப்மன் கில் மற்றும் சாஹா ஆகிய இரண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினார். முதல் இரண்டு ஓவர்கள் குஜராத் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்திய நிலையில் இரண்டு ஓவரின் இறுதியில் கைக்கு வந்த சுப்மன் கில் கேட்சை தீபக் சஹார் தவறவிட்டார். அது எந்த அளவுக்கு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பது போகப் போக தெரியும்.
இதனை அடுத்து இரண்டாவது ஓவரை வீச வந்த தீபக் சாஹர் பந்துகளை இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என அடித்து சாஹா அடித்து விஸ்வரூபம் எடுத்தார்.
தீபக் சஹார் கேட்சை விட்டதால் மனரீதியில் உளைச்சலாக இருக்கும் நிலையில் அவரது பந்து வீச்சை சரியாக பயன்படுத்தி பவுண்டர்களையும் சிக்ஸர்களையும் விலாசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தீபக் சஹார் அந்த கேட்சைவிட்டது மிகப்பெரிய பாதகமாக சிஎஸ்கே அணிக்கு அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது