குஜராத்துக்கு எதிராக வெற்றியே இல்லை.. வரலாற்று சாதனையை படைக்குமா சிஎஸ்கே..?

Published:

ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைந்து நாளை முதல் பிளே ஆப் போட்டிகள் நடைபெறவிருக்கும் நிலையில் நாளை சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் இதுவரை மூன்று முறை மோதியுள்ள நிலையில் 3 போட்டிகளில் குஜராத் தான் வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை குஜராத் அணி விளையாடவில்லை என்ற நிலையில் முதல் முறையாக நாளை விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறதால் சிஎஸ்கே அணிக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்பதால் சிஎஸ்கே அணி குஜராத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Hardik Pandya PTI scaled 2அதேபோல் மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் எலிமினேட்டர் போட்டி நடைபெற உள்ளது. சிஎஸ்கே போலவே மும்பை அணியும் இதுவரை லக்னோ அணியை வீழ்த்தியதில்லை. மூன்று முறை மும்பை லக்னோ அணிகள் மோதிய நிலையில் மூன்று முறையும் லக்னோ அணிதான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குஜராத்துக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியும் வென்று வரலாற்று சாதனை படிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த ஆண்டு அறிமுகமான குஜராத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகளுமே இரண்டாவது ஆண்டாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த சுற்றில் தகுதி பெற்றதை பயன்படுத்தி இந்த இரண்டில் ஒரு அணி 2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் இந்த ஆண்டு தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சிஎஸ்கே அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்து ஓய்வு பெற வேண்டும் என்பது தோனியின் எண்ணமாக இருக்கலாம். எனவே அவர் தீவிரமாக நாளைய போட்டியில் விளையாடி வெற்றியை தேடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் போட்டி மிகப்பெரிய அளவில் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...