ஐபிஎல் தொடரில் 14 சீசன்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 முறை பைனலுக்கு சென்றுள்ளது என்பதும் 10 முறை பைனலுக்கு கொண்டு சென்றது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி என்பதும் சாதனையாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் முடிவடையும் நிலையில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் ஒன்று போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதனை அடுத்து 14 சீசன்களில் பத்து முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வைத்த ஒரே கேப்டன் என்ற பெருமையும் தல தோனிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பைனலுக்கு தகுதி பெற்ற சீசன்களின் விபரங்கள் பின்வருமாறு.
2008 – ரன்னர் அப்
2010 – சாம்பியன்
2011 – சாம்பியன்
2012 – ரன்னர் அப்
2013 – ரன்னர் அப்
2015 – ரன்னர் அப்
2018 – சாம்பியன்
2019 – ரன்னர் அப்
2021 – சாம்பியன்
2023 – ஃபைனலுக்கு தகுதி
மேலும் 14 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய நிலையில் அனைத்திலும் தல தோனி தான் கேப்டன் ஆக இருந்துள்ளார் என்பது ஐபிஎல் வரலாற்றில் இத்தனை சீசன்களில் எந்த ஒரு வீரரும் கேப்டன் ஆக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் 10 முறை ஒரு அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்ற சாதனையை தோனி வைத்துள்ள நிலையில் தோனியை அடுத்து ஐந்து முறை ரோகித் சர்மா மும்பை அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்று உள்ளார் என்பதும் அதனை அடுத்த கௌதம் கம்பீர் இரண்டு முறை கொல்கத்தா அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பத்து முறை ஒரு அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்ற தோனியின் சாதனை முறியடிக்கப்பட வாய்ப்பே இல்லை என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.