பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிஎஸ்கே.. தல தோனி அபார கேப்டன்ஷிப்..!

Published:

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது குவாலிபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடினார் என்பதும் குறிப்பாக ருத்ராஜ் அரைச்சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சிஎஸ்கே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 157 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...